பெட்ரோல், டீசலுக்கு 'குட்பை'...பூமியின் மிகப்பெரிய மலைத்தொடர்களுக்கு அடியில் டிரில்லியன் டன் இயற்கை ஹைட்ரஜன் இருப்பை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்
பெட்ரோல், டீசலுக்கு 'குட்பை'... மலைகளுக்கு அடியில் டிரில்லியன் டன் இயற்கை ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு! பூமியின் மிகப்பெரிய மலைத்தொடர்களுக்கு அடியில், மில்லியன் கணக்கான ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த இயற்கையான ஹைட்ரஜன் (Natural Hydrogen) இருப்பை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். நாம் மலைகளைப் பார்த்து ரசித்திருப்போம். ஆனால், அந்தப் பிரம்மாண்ட மலைகளுக்கு அடியில், உலகத்தையே மாற்றக்கூடிய ஒரு ‘எரிசக்திப் புதையல்’ ஒளிந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், விஞ்ஞானிகள் ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். தங்கம் இல்லை, வைரம் இல்லை... இது 'இயற்கை ஹைட்ரஜன்' (Natural Hydrogen.! லட்சக்கணக்கான ஆண்டுகளாக பூமி நமக்காகச் சேர்த்து வைத்திருக்கும் இந்தச் சொத்து, எதிர்கால உலகின் பெட்ரோல், டீசல் தேவையைத் தூக்கிச் சாப்பிடும் வல்லமை கொண்டது. இயற்கை ஹைட்ரஜன் எப்படி உருவானது? பூமிக்கடியில் நடக்கும் இந்த ‘ரகசியம்’ (The Geological Magic) எப்படி உருவானது தெரியுமா? ஆல்ப்ஸ் (Alps) போன்ற பெரிய மலைத்தொடர்கள் உருவானபோது, பூமித்தட்டுகள் மோதி, அடி ஆழத்தில் இருந்த பாறைகள் மேலே வந...