பெட்ரோல், டீசலுக்கு 'குட்பை'...பூமியின் மிகப்பெரிய மலைத்தொடர்களுக்கு அடியில் டிரில்லியன் டன் இயற்கை ஹைட்ரஜன் இருப்பை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்

பெட்ரோல், டீசலுக்கு 'குட்பை'... மலைகளுக்கு அடியில் டிரில்லியன் டன் இயற்கை ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு!

 பூமியின் மிகப்பெரிய மலைத்தொடர்களுக்கு அடியில், மில்லியன் கணக்கான ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த இயற்கையான ஹைட்ரஜன் (Natural Hydrogen) இருப்பை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

நாம் மலைகளைப் பார்த்து ரசித்திருப்போம். ஆனால், அந்தப் பிரம்மாண்ட மலைகளுக்கு அடியில், உலகத்தையே மாற்றக்கூடிய ஒரு ‘எரிசக்திப் புதையல்’ ஒளிந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், விஞ்ஞானிகள் ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். தங்கம் இல்லை, வைரம் இல்லை... இது 'இயற்கை ஹைட்ரஜன்' (Natural Hydrogen.! லட்சக்கணக்கான ஆண்டுகளாக பூமி நமக்காகச் சேர்த்து வைத்திருக்கும் இந்தச் சொத்து, எதிர்கால உலகின் பெட்ரோல், டீசல் தேவையைத் தூக்கிச் சாப்பிடும் வல்லமை கொண்டது.



இயற்கை ஹைட்ரஜன் எப்படி உருவானது?

பூமிக்கடியில் நடக்கும் இந்த ‘ரகசியம்’ (The Geological Magic) எப்படி உருவானது தெரியுமா? ஆல்ப்ஸ் (Alps) போன்ற பெரிய மலைத்தொடர்கள் உருவானபோது, பூமித்தட்டுகள் மோதி, அடி ஆழத்தில் இருந்த பாறைகள் மேலே வந்தன. அந்தப் பாறைகளுக்கு இடையில் ஒரு ரசாயன வித்தை நடக்கிறது. செர்ப்பென்டைனைசேஷன் (Serpentinization) பூமிக்கடியில் உள்ள நீர், 'ஆலிவைன்' (Olivine) என்ற பாறையோடு சேரும்போது, தானாகவே ஹைட்ரஜன் வாயு உற்பத்தியாகிறது. ரேடியோலிசிஸ் (Radiolysis) இன்னொரு முறையில் யுரேனியம் போன்ற தனிமங்களின் கதிர்வீச்சு, நீரைப் பிளந்து ஹைட்ரஜனை உருவாக்குகிறது. இப்படி உருவான ஹைட்ரஜன், பாறை இடுக்குகளில் லட்சக்கணக்கான ஆண்டுகளாகத் தேங்கி நிற்கிறது. "இது உலக எரிசக்தி உற்பத்தியில் ஒரு பெரிய புரட்சியையே உண்டாக்க போகிறது" என்கின்றனர் விஞ்ஞானிகள்.


ஏன் இந்த ஹைட்ரஜன் ‘ஸ்பெஷல்’?

இப்போது நாம் பயன்படுத்தும் ஹைட்ரஜன் பெரும்பாலும் தொழிற்சாலைகளில் பெட்ரோலியத்தைப் பயன்படுத்திச் செயற்கையாக உருவாக்கப்படுவது. ஆனால், மலைக்கடியில் கிடைத்திருக்கும் இந்த ஹைட்ரஜன். இது இயற்கையானது, சுற்றுச்சூழலுக்கு எந்தக் கெடுதலும் செய்யாது. டைனோசர் காலத்திற்கும் முன்னிலிருந்தே இது பூமிக்கடியில் சேகரிக்கப்பட்டு வருகிறது. எல்லாம் சரி, நாளைக்கே இதை வண்டியில் ஊற்றி ஓட்டலாமா? என்றால், அங்குதான் ஒரு சிக்கல். ஹைட்ரஜன் மூலக்கூறு மிக மிகச் சிறியது. பாறையில் ஒரு சின்னத் துளை இருந்தால் கூட, மொத்த வாயுவும் லீக் (Leak) ஆகிவிடும். இது எளிதில் தீப்பற்றக்கூடியது. அதனால், பெட்ரோல் கிணறு தோண்டுவது போல இதைத் தோண்ட முடியாது. மிகத் துல்லியமான சென்சார்கள், கசிவே இல்லாத குழாய்கள் எனப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித்தான் இதை வெளியே எடுக்க முடியும்.


எதிர்காலம் எப்படி இருக்கும்?

உலக நாடுகள் சும்மா இருக்கவில்லை. இப்போதே பல அரசாங்கங்களும், நிறுவனங்களும் "எங்க ஊர் மலைக்கு அடியில் ஹைட்ரஜன் இருக்கா?" என்று துளையிட ஆரம்பித்துவிட்டன. இன்னொரு குட் நியூஸ் என்னவென்றால், இந்த ஹைட்ரஜனை எடுக்கும்போது, விலை உயர்ந்த ஹீலியம் (Helium) வாயுவும் போனஸாகக் கிடைக்க வாய்ப்புள்ளதாம். ஹைட்ரஜன் நச்சுத்தன்மையற்றது என்றாலும், பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தால் ஆபத்தை விளைவிக்கும். எனவே, நிலத்தடி நீர் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதிக்காத வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி இதை வணிகமயமாக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.




























This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

  • Job Type: Mobile-based part-time work
  • Work Involves:
    • Content publishing
    • Content sharing on social media
  • Time Required: As little as 1 hour a day
  • Earnings: ₹300 or more daily
  • Requirements:
    • Active Facebook and Instagram account
    • Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob

Comments

Popular posts from this blog

Different Types of Gold Purity Certifications and Hallmarking Standards Every Buyer Should Know Before Purchasing Gold Jewellery in India

இன்றைய சமூகத்தில் வரதட்சணைக்காக பெண்களுக்கு நடத்தப்படும் துன்புறுத்தல்கள் அதன் அடிப்படையிலான பெண்கள் கொடுமைகள் மற்றும் அதனால் நேரும் மரணங்கள் தொடர்பான சமீபத்திய சமூக நிகழ்வுகள்

The Evolution of House Construction Methods from Ancient Mud Huts to Modern Smart and Sustainable Homes