வண்ணமயமான மலைகளையும், கோடிக்கணக்கான ஆண்டுகளாகக் கனிமங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் செயல்பாட்டால் அவை எவ்வாறு தங்கள் வண்ணங்களைப் பெற்றன என்பதையும் பற்றி இங்கே பார்ப்போம்
மஞ்சள், சிகப்பு, ஊதா: இயற்கையே வர்ணம் தீட்டிய உலகின் 6 கண்கவர் மலைத்தொடர்கள்!
உலகெங்கிலும் உள்ள 6 வண்ணமயமான மலைகளையும், கோடிக்கணக்கான ஆண்டுகளாகக் கனிமங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் செயல்பாட்டால் அவை எவ்வாறு தங்கள் வண்ணங்களைப் பெற்றன என்பதையும் பற்றி இங்கே பார்ப்போம்.
பயணம் என்பது வெறும் இடங்களை பார்ப்பது மட்டுமல்ல; நாம் பார்க்கும் அதிசயங்களுக்கு பின் மறைந்திருக்கும் அற்புதமான கதைகளையும் அறிவதுதான். உலகில் சில மலைகள் இருக்கின்றன, அவற்றின் பிரகாசமான, வழக்கத்திற்கு மாறான வண்ணங்களைப் பார்க்கும்போது, இயற்கையே அவற்றைத் தனது பிரத்தியேக ஓவியமாக வரைந்தது போலத் தோன்றும்.
சாதாரண பனி மூடிய சிகரங்கள் அல்லது பச்சை மலைகளை மறந்துவிடுங்கள். உலகம் முழுவதும் அரிய மலைகள் உள்ள. ஆனால் இந்த வண்ணங்கள் போலியானவையோ அல்லது எடிட் செய்யப்பட்டவையோ அல்ல. அவை கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையாக உருவானவை. இதற்குக் காரணம், மண்ணில் உள்ள கனிமங்கள் அவற்றின் சுற்றுப்புறங்களுடன் வினைபுரிந்த விதம்தான். இந்த ஒவ்வொரு மலைக்கும் ஒரு தனிப்பட்ட கதை உள்ளது. ஆனால் இவை அனைத்தும் அறிவியலையும் அழகையும் கலந்து, புவியின் கடந்த காலத்தை நாம் கண்களால் பார்க்கக்கூடிய ஒன்றாக மாற்றியமைத்திருக்கின்றன.
சிகப்பு நிறம்: இரும்பின் ஆதிக்கம் (Iron gives reds).
பச்சை நிறம்: தாமிரத்தின் விளைவு (Copper brings out greens).
மஞ்சள் நிறம்: கந்தகத்தின் பங்களிப்பு (Sulfur creates yellows).
இயற்கையின் சொந்த கைவினைப் படைப்புகள் போலத் தோற்றமளிக்கும், உலகெங்கிலும் உள்ள 6 வண்ணமயமான மலைகள் பற்றி பார்போம்.
ஜாங்யே டான்ஷியா (Zhangye Danxia), சீனா
கான்சு மாகாணத்தின் வறண்ட பகுதியில், ஜாங்யே டான்ஷியா மலைகள், சிகப்பு, ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிறங்களின் துடிப்பானகோடுகளுடன் தனித்து நிற்கின்றன. கோடிக்கணக்கான ஆண்டுகளாக அடுக்கப்பட்ட மணற்கல் (sandstone) மற்றும் கனிமங்களிலிருந்தே இந்த வண்ணங்கள் வருகின்றன. பின்னர், இயற்கையான அரிப்பினால் அவை வெளிப்படுத்தப்பட்டன.
இரும்புச்சத்து நிறைந்த அடுக்குகள் சிகப்பு நிறங்களையும், மற்ற கனிமங்கள் வேறுபட்ட நிறங்களையும் சேர்க்கின்றன. இந்த நிலப்பரப்பு கையால் வரையப்பட்டது போல் தோற்றமளிக்கிறது. அதன் வடிவங்கள், அவை முற்றிலும் இயற்கையானவை என்றாலும், கிட்டத்தட்ட செயற்கையானவை போலத் துல்லியமாக இருப்பதுதான் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம்.
செரானியா டி ஹார்னோகல் (Serranía de Hornocal), அர்ஜென்டினா
அர்ஜென்டினாவின் ஜுஜுய் மாகாணத்தில் உயரத்தில் அமைந்துள்ள ஹார்னோகல் மலைத்தொடர், அதன் பரந்த அளவிலான வண்ணங்களுக்கு பெயர் பெற்றது. இது பொதுவாக 14 வண்ணங்களின் (shades) தொகுப்பாக விவரிக்கப்படுகிறது. இந்த அடுக்குகள் பண்டைய சுண்ணாம்புக்கல் மற்றும் காலப்போக்கில் கனிம மாற்றங்களுக்கு உட்பட்ட பிற படிவுகளிலிருந்து உருவானவை.
புவி மேலோட்டின் நகர்வுகள் இந்த அடுக்குகளை மேல்நோக்கித் தள்ளின, இதனால் ஒரு காலத்தில் புதைந்திருந்த பொருள் பல வண்ணங்களைக் கொண்ட மலை முகப்பாக மாறியது. இன்று, இது தென் அமெரிக்காவில் உள்ள மிகவும் தனித்துவமான மலைத்தொடர்களில் ஒன்றாகும்.
வினிகுன்கா (Vinicunca) / ரெயின்போ மவுண்டன், பெரு
'ரெயின்போ மவுண்டன்' (Rainbow Mountain) என்றும் அழைக்கப்படும் பெருவின் வினிகுன்கா மலை, சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட தளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை பட்டைகள் உட்பட இங்குள்ள வண்ணங்கள், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற கனிமங்களின் ஆக்சிஜனேற்றம் (oxidation) காரணமாக உருவாகின்றன.
பல நூற்றாண்டுகளாக, இந்த மலை பனி மற்றும் பனியாறுகளுக்கு அடியில் மறைந்திருந்தது. சமீபத்திய தசாப்தங்களில் பனி உருகத் தொடங்கியபோது, வண்ணங்கள் மெதுவாக வெளிப்பட்டன. இது விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகிய இருவரையும் ஈர்த்து வருகிறது.
பெயின்டட் ஹில்ஸ் (Painted Hills), அமெரிக்கா
ஒரேகான் மாகாணத்தில் உள்ள பெயின்டட் ஹில்ஸ், இயற்கை வண்ண அடுக்கிற்கு அமைதியான, ஆனால் சுவாரஸ்யமான உதாரணமாகும். இந்த மலைகள் உயரமானவை அல்ல, ஆனால் சிகப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்களின் தனித்துவமான பட்டைகளைக் காட்டுகின்றன. ஒவ்வொரு பட்டையும் வெவ்வேறு சுற்றுச்சூழல் சகாப்தங்களைக் குறிக்கிறது.
சிகப்பு நிறங்கள் வெப்பமான, ஈரமான சூழ்நிலையின்கீழ் உருவானவை. கருப்பு நிறம், லிக்னைட்டாக மாறிய பழைய தாவர பொருட்களில் இருந்து வருகிறது. மற்ற வண்ணமயமான மலைகளைப் போலல்லாமல், இங்குள்ள வண்ணங்கள் ஈரப்பதத்தின் அளவைப் பொறுத்து லேசாக மாறுகின்றன.
செவன் கலர்ட் எர்த்ஸ் (Seven Coloured Earths), மொரீஷியஸ்
மொரீஷியஸின் சிறிய பகுதியில், சாமரெல் கிராமத்திற்கு அருகில், சிகப்பு, நீலம், மஞ்சள் மற்றும் ஊதா நிறங்களில் கோடு போட்டது போலத் தோற்றமளிக்கும் மணல் மேடுகள் உள்ளன. எரிமலைப் பாறைகள் உடைந்து கனிமங்கள் நிறைந்த மணலாக மாறியதன் விளைவே இந்த வண்ணங்கள்.
மழை அல்லது காற்றின் பின்னரும் கூட இந்த மணல்கள் கலக்காமல் பிரிந்தே இருப்பது, விஞ்ஞானிகளை குழப்பமடையச் செய்கிறது மற்றும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இது ஒரு அரிய புவியியல் அம்சம்.
செரோ டி லாஸ் சியட் கொலோரஸ் (Cerro de los Siete Colores), அர்ஜென்டினா
ஆண்டீஸ் மலை அடிவாரத்திலிருந்து வெகு தொலைவில் இல்லாமல், புர்மாமார்கா நகரம் 'ஏழு வண்ணங்களின் மலை'க்கு (Hill of Seven Colours) தாயகமாக உள்ளது. இது அர்ஜென்டினாவில் உள்ள கச்சிதமான, ஆனால் கண்கவர் புவியியல் தளமாகும்.
களிமண், மணற்கல் மற்றும் தாமிர ஆக்சைடுகள் போன்ற பல்வேறு கனிமங்கள், புவியின் கடந்த காலத்தின் வெவ்வேறு காலங்களில் படிந்ததன் விளைவாகவே தெரியும் இந்த அடுக்குகள் உருவாகியுள்ளன. அவற்றில் சில நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் பழமையானவை. இங்குக் காணப்படும் இளஞ்சிவப்பு, பச்சை, ஊதா நிறங்களின் கலவையை, அதிகாலையிலும் மாலை நேர வெளிச்சத்திலும் காணும்போது மிகவும் அழகாக இருக்கும்.
This Content Sponsored by SBO Digital Marketing.
Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:
- Job Type: Mobile-based part-time work
- Work Involves:
- Content publishing
- Content sharing on social media
- Time Required: As little as 1 hour a day
- Earnings: ₹300 or more daily
- Requirements:
- Active Facebook and Instagram account
- Basic knowledge of using mobile and social media
For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160
a.Online Part Time Jobs from Home
b.Work from Home Jobs Without Investment
c.Freelance Jobs Online for Students
d.Mobile Based Online Jobs
e.Daily Payment Online Jobs
Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob


Comments
Post a Comment