சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படும் பூண்டு உலகெங்கும் பரவிய வரலாறு மற்றும் ஆறு மாத ஆய்வின் விளக்கம் நார் சத்து நிறைந்த பூண்டின் குணம் பற்றி பார்ப்போம்

பூண்டு உலகெங்கும் பரவிய வரலாற 

பூண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் தனித்துவமான சுவை மற்றும் மருத்துவ குணங்களுக்காக மதிக்கப்படுகிறது. இது நுண்ணுயிரிகளையும் வைரஸ்களையும் எதிர்க்கும் திறன் கொண்டதால், சமையலிலும் பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய இடம் பிடித்துள்ளது.

மத்திய ஆசியாவில் தோன்றிய பூண்டு, மக்கள் இடம்பெயர்ந்தபோது ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் பரவியது. இன்று, உலகில் அதிக அளவில் பூண்டை உற்பத்தி செய்கிற நாடாக சீனா உள்ளது.

பிபிசி உலக சேவையின் புட் செயின் நிகழ்ச்சி, பூண்டின் வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது. அதே சமயம், பூண்டு உண்மையில் நமது ஆரோக்கியத்துக்கு நல்லதா? என்ற ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறது.


மருந்தாக பயன்படுத்தப்படும் பூண்டு

உலகில் தற்போது 600-க்கும் மேற்பட்ட பூண்டு வகைகள் உள்ளன. உஸ்பெகிஸ்தான், ஜார்ஜியா போன்ற இடங்களில் விளையும் சில வகைகள் சமீபத்தில் தான் உலக சந்தையில் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

சமையலில் முக்கியப் பங்கு வகிப்பதைத் தாண்டி, பூண்டு சளியின் அறிகுறிகளைக் குறைக்கவும் பயன்படுகிறது. ரத்த அழுத்தம், கொழுப்பு, புற்றுநோய் ஆகியவற்றில் பூண்டின் தாக்கத்தை ஆய்வு செய்ய பல மருத்துவப் பரிசோதனைகள் நடந்துள்ளன. ஆனால் அதில் வெளியான முடிவுகள் மாறுபட்டதாக உள்ளன.


ஆறு மாத ஆய்வு

உதாரணமாக, இரானில் நடந்த சிறிய ஆய்வு, பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு ஆறு வாரங்களில் கொழுப்பையும் ரத்த அழுத்தத்தையும் குறைத்ததாகக் கூறுகிறது. ஆனால், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 200 நபர்களிடம் ஆறு மாதங்களுக்கு நடந்த ஆய்வில் கொழுப்பு குறைவதற்கான குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் காணப்படவில்லை.

2014-இல் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு, பூண்டு வலுவான நுண்ணுயிர், வைரஸ் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியது.

"பூண்டில் அதிக அளவு பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், கந்தகம் ஆகியவை இருக்கின்றன. மெக்னீசியம், மாங்கனீசு, இரும்பு போன்றவை மிதமான அளவில் உள்ளன. உண்மையில் இது ஒரு அதிசய காய்கறி," என்கிறார் பிரிட்டிஷ் டயட்டெடிக் அசோசியேஷனின் செய்தித் தொடர்பாளரும் குழந்தை மருத்துவ உணவியல் நிபுணருமான பஹீ வான் டி போர்.


ப்ரீபயாடிக் நார்ச்சத்து

"பூண்டில் 'அல்லிசின்' என்ற கந்தகம் கூட்டு பொருள் உள்ளது. இதில், நம் குடல் மிகவும் விரும்பும் ப்ரீபயாடிக் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதில் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மையும் உள்ளது." என்றார்.

அதேபோல் பூண்டின் நார்ச்சத்து குடல் பாக்டீரியாவை வளர்க்க உதவுகிறது, மலச்சிக்கல், வயிறு வீக்கம் ஆகியவற்றையும் குறைக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடுவது பாதுகாப்பானது.

பூண்டு குறித்து உள்ள மிகப் பழமையான மருத்துவ குறிப்பும் சுமார் 3,500 ஆண்டுகள் பழமையானது. 'எபர்ஸ் பாப்பிரஸ்' என்று அழைக்கப்படும் அந்த ஆவணத்தில், உடல்நலக்குறைவு முதல் உடலிலுள்ள ஒட்டுண்ணிகள், இதயம் மற்றும் சுவாசக் கோளாறுகள் வரை பல பிரச்னைகளுக்கு பூண்டை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய பல குறிப்புகள் இருந்தன

ஆனால் அமெரிக்கன் ஃபேமிலி ஃபிசிஷியன் (American Family Physician) என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி, பூண்டை அதிகமாக, குறிப்பாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்னைகள், வாயு பிரச்னை மற்றும் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவில் மாற்றம் ஏற்படலாம்.























This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

  • Job Type: Mobile-based part-time work
  • Work Involves:
    • Content publishing
    • Content sharing on social media
  • Time Required: As little as 1 hour a day
  • Earnings: ₹300 or more daily
  • Requirements:
    • Active Facebook and Instagram account
    • Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob

Comments

Popular posts from this blog

இன்று நாம் பரவலாகவும் நவீனமாகவும் பயன்படுத்தும் இணையத்தின் வளர்ச்சி 2000 ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்று பார்ப்போம்

நம் பாரம்பரியத்தின் மறையாத நினைவு, கடந்த காலத்தின் சாட்சி, காலத்தால் மறக்க முடியாத கதை - சுமைதாங்கி கல்

Understanding Air Circuit Breakers: Functionality, Benefits, and Applications in Industrial and Commercial Electrical Power Distribution Systems