WhatsApp, Arattai, Facebook Messenger மற்றும் Instagram செயலிகளின் அம்சங்கள், நன்மைகள், குறைபாடுகள் பற்றிய முழுமையான ஒப்பீட்டு விமர்சனம் பற்றி பார்ப்போம்
WhatsApp, Arattai, Facebook Messenger மற்றும் Instagram பற்றிய முழுமையான ஒப்பீட்டு விமர்சனம்
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், தகவல்களை உடனடி பரிமாற்றம் செய்வதற்கான செயலிகள் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளன. நம்மில் பெரும்பாலானவர்கள் WhatsApp, Facebook Messenger, Instagram மற்றும் இந்தியாவின் Arattai ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். இவை அனைத்தும் மெசேஜிங் வசதிகளை வழங்கினாலும், ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை.
Meta நிறுவனத்தின் ஒரு பிரபல செயலி. Text, voice, video calls, group chats, status updates போன்ற வசதிகள் உள்ளன. End-to-End encryption வழங்குவதால் பாதுகாப்பு சிறந்தது. ஆனாலும், தரவுகளை Meta உடன் பகிரும் விவகாரம் சில பயனர்களை கவலையடையச் செய்கிறது.
WhatsApp செயலியின் வரலாறு
WhatsApp என்பது 2009ஆம் ஆண்டில் Brian Acton மற்றும் Jan Koum என்ற இரண்டு முன்னாள் Yahoo ஊழியர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் நோக்கம், எளிமையான மற்றும் விளம்பரமற்ற மெசேஜிங் சேவையை உருவாக்குவது.
முதலில், WhatsApp ஒரு ஸ்டேட்டஸ்-அப்டேட் செயலி ஆகவே தொடங்கப்பட்டது. பின்னர் பயனர்களின் தேவையைப் புரிந்து, மெசேஜிங் வசதி சேர்க்கப்பட்டது. இது வெகுவேகமாக பிரபலமானது. 2014ஆம் ஆண்டு, Facebook (தற்போது Meta) நிறுவனம், WhatsApp-ஐ 19 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்கியது.
இந்த செயலி தற்போது 2 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை உலகம் முழுவதும் கொண்டுள்ளது. Text message, voice & video calls, group chats, status updates, stickers, documents & media share போன்ற பல வசதிகளை வழங்குகிறது.
தரவு பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்தாலும், WhatsApp தற்போது End-to-End Encryption வசதியை வழங்குகிறது, இதன் மூலம் தகவல்கள் பாதுகாப்பாக அனுப்பப்படும்.
முக்கிய ஆண்டுகள்
• 2009 – WhatsApp உருவாக்கப்பட்டது
• 2010 – iPhone & Android வசதிகள்
•2014 – Facebook வாங்கியது
• 2016 – End-to-End Encryption அறிமுகம்
• 2021 – Privacy policy விவாதம்
Arattai
Zoho நிறுவனம் உருவாக்கிய 100% இந்திய செயலி. இங்கு voice/video call, text messages, group chats போன்றவை உள்ளன. உங்கள் தரவு இந்தியாவில் சேமிக்கப்படுகிறது. இது பாதுகாப்பு மற்றும் தனியுரிமை lovers-க்கு சிறந்த தேர்வாக உள்ளது. ஆனால், UI மற்றும் advanced features இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.
அரட்டையின் தோற்றம்
2020 ஆம் ஆண்டு, WhatsApp தனது புதிய privacy policy அறிவித்தபோது, இந்தியாவில் மக்கள் பலர் தனியுரிமை குறித்து கவலையடைந்தனர். இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, ZOHO நிறுவனம் "அரட்டை" செயலியை அறிமுகப்படுத்தியது.
செயலியின் அம்சங்கள்
• Text Messages
• Voice & Video Calls
• Group Chats
• File & Media Sharing
• Status updates (மேம்படுத்தல் நிலையில்)
அரட்டையின் சிறப்புகள்
100% இந்தியா தயாரித்த செயலி
தரவுகள் இந்தியாவில் சேமிக்கப்படுகின்றன
தனியுரிமை பாதுகாப்பு முக்கிய நோக்கம்
விளம்பரமின்றி செயல்படும்
உள்நாட்டு மெசேஜிங் ஆப்ஸ்களுக்கு மாற்றாக வந்தது
குறைகள்
WhatsApp, Telegram போன்ற செயலிகளுடன் ஒப்பிடும்போது, சில advanced features இன்னும் பிந்திய நிலையில் உள்ளது.
UI (User Interface) சிறிய பயனாளர் அனுபவ மேம்பாடுகள் தேவைப்படுகின்றன.

.png)
Comments
Post a Comment