உறுதியானவட்டி வருமானம் மற்றும் வரி விலக்கு உள்ளிட்ட அம்சங்களுடன் ஒன்றிய அரசின் உத்தரவாதத்துடன் 5 வருடத்தில் ₹10 லட்சம் வரை சேமிக்கும் திட்டம்
ஏழைகளின் அட்சய பாத்திரம் மத்திய அரசின் சூப்பர் திட்டம்
நாட்டு மக்களிடையே முதலீடு மற்றும் சேமிப்புப் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட திட்டம் தான் தேசிய சேமிப்புச் சான்றிதழ். உறுதியானவட்டி வருமானம் மற்றும் வரி விலக்கு உள்ளிட்ட அம்சங்களுடன் ஒன்றிய அரசின் உத்தரவாதத்துடன் இந்த திட்டத்தின் மூலம் பெற முடியும்.
நம்பகமான முதலீடு
நாட்டு மக்களிடையே முதலீடு மற்றும் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையும் மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டம் தான் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம்.நம்பகமான முதலீடு, உறுதியான வட்டி வருமானம், வரி விலக்கு உள்ளிட்ட அம்சங்களுடன் மத்திய அரசின் உத்தரவாதத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தியக் குடிமக்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். வயது வரம்பு கிடையாது. எந்தவொரு தபால் அலுவலகத்திலும் எளிதாகக் கணிக்கு திறக்க முடியும்.இணைய தபால் வங்கி மூலமாகவும் (Post Office Bank) பயன்பெறலாம். தனிநபராகவோ அல்லது இருவர், மூவர் இனைந்து கூட்டுக் கணக்கு தொடங்கி முதலீடு செய்யலாம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் கணக்கை தாங்களே நிர்வகிக்க முடியும். வெளிநாடுவாழ் இந்தியர்கள் இத்திட்டத்தில் பயன் பெறமுடியாது.
தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை நகல், (PAN) அட்டை நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப் படிவத்தைப் பூர்த்தி செய்து ரொக்கம், காசோலை கேட்பு சோலை இவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலமாக முதலீடுசெல்லலாம். மேலும், முதலீட்டுக் கணக்கிற்கு மூன்றுக்கும் மேற்பட்ட நியமனதாரர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
முதலீடு வரம்பு
இத்திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு ஆயிரம் ரூபாய் ஆகும். அதிகபட்ச வரம்பு ஏதும் கிடையாது. குறைந்தபட்ச முதலிடு ஆயிரம் ரூபாய் முதல் 100 மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலிடு செய்யலாம்.
முதிர்வுக் காலம்
நம் முதலீட்டுக்கான முதிர்வுக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஒருமுறை செய்யும் முதலீடானது அடுத்த ஐந்தாண்டுகளுக்கு திரும்பப் பெற முடியாத வகையில் லாக் இன் செய்யப்பட்டு விடும். முதிர்வு காலத்துக்கு முன்னர் நம் முதலீட்டுப் பணத்தை திரும்ப பெற முடியாது. ஒன்றிய நிதி அமைச்சத்தில் நிபந்தனைகளின்படி ஒரு ஆண்டில் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறையும் வட்டி விகிதம் மாற்றத்திற்கு உட்படும். இதன் தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.7% ஆகும்.நம் முதலீடு, கூட்டு வாட்டி அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுவதால் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் வட்டியானது மறுமுதலீடு செய்யப்பட்டு ஐந்தாண்டுகழித்து அசலுடன் சேர்ந்து வழங்கப்படும். முதலிடைத் தொடங்கிய போது என்ன வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டதோ அதுவே முதிர்வுக் காலம் முழுக்க வரவு வைக்கப்படும்.
உதாரணமாக, உங்கள் குழந்தைக்கு திருமணம் செய்வதற்கு பணம் வேண்டுமென்று வைத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1 லட்சம் லட்சம் முதலீடு செய்யும்படி இருந்தால், 7.7% கூட்டு வட்டி விகிதத்தின் கீழ் 5 ஆண்டு முடிவில் ₹7.2 லட்சம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.
வரிச் சலுகை
வருமான வரிச் சட்டம் கீழ் ஒரு நிதியாண்டில் நியத்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு வரிச் சலுகை பெற முடியும். வட்டி வருமானம் அடுத்தடுத்த ஆண்டுகளில் வரிமுதலீடு செய்ய படுவதால் அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் அந்தத் தொகைக்கு வரிச் சலுகை பெற முடியும்.
அடமான வசதி
முதலீட்டுக்கு முதிர்வுக் காலம் நிர்ணயிக் கப்பட்டிருப்பதால், ஐந்தாண்டுகளுக்குப் பிறகான இலக்குகனை அடைய விரும்புவோருக்கு இத்திட்டம் உதவிகரமாக இருக்கும். வருமான வரிச் சலுகை மற்றும் அடமான வசதி அளிக்கப்படும். இது வழக்கமான நிலையான வைப்பு நிதித் திட்டங்களை விட நிச்சயம் இலாபகரமான முதலீடாக இருக்கும். அரசின் உத்தரவாதத்துடன் கூடிய திட்டம் என்பதால், அபாயங்கள் என்பது மிகக்குறைவு. நம் முதலீட்டுக்கு வழங்கப்படும் வட்டி விகிதமானத. பணவீக்க விகிதத்தை விட சற்றுஅதிகமாக இருக்கும். எதிர்காலத்திற்கும் பயனளிக்கும் மேலும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் அமையப்பெற்ற தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் இணைய விரும்புவோர் அருகிலுள்ள தபால் அலுவகத்தை அணுகலாம்.
This Content Sponsored by SBO Digital Marketing.
Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:
- Job Type: Mobile-based part-time work
- Work Involves:
- Content publishing
- Content sharing on social media
- Time Required: As little as 1 hour a day
- Earnings: ₹300 or more daily
- Requirements:
- Active Facebook and Instagram account
- Basic knowledge of using mobile and social media
For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160
a.Online Part Time Jobs from Home
b.Work from Home Jobs Without Investment
c.Freelance Jobs Online for Students
d.Mobile Based Online Jobs
e.Daily Payment Online Jobs
Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob

.png)
Comments
Post a Comment