நிலத்தின் பெருமை மற்றும் நிலம் சார்ந்த பகுதிகளை பற்றி நிலமே நம்மிடம் பேசுவது போன்ற ஒரு கற்பனை கட்டுரையை பார்ப்போம்
மனிதா நீ எங்கே நிற்கிறாய்!
மனிதா நீ எங்கே நிற்கிறாய்! என் மேல் அல்லவா நின்று கொண்டிருக்கிறாய்!
உன்னைத் தாங்குவதால் நான் பெருமையடைகிறேன். உன்னை மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்தையும் தாங்கிப் பிடிக்கும் தன்மையினால் நான் உயர்வடைகின்றேன்.
குறிஞ்சி
மலையாக உயர்ந்து நிற்கும் போது நான் குறிஞ்சி என அழைக்கப்படுகிறேன். மரங்கள் அடர்ந்து, உயர்ந்து வளர்ந்து மலைக்கு அழகு சேர்க்கின்றேன். தண்ணீரைச் சேகரித்து அணைக்குள் அடக்கி அனைவருக்கும் உதவுகின்றேன். அருவியாய் குதித்தோட இடம் தருகிறேன். நீரினைத் தாங்கும் போது குளிர்ச்சியடைகின்றேன்.
முல்லை
காடுகள் நிறைந்த என்னை முல்லை என அழைக்கிறார்கள். எல்லையில்லா நிலப்பரப்பினால் மரங்கள் அடர்ந்த வனமாக காட்சியளிக்கின்றேன். விலங்குகள் உயிரினங்கள் சுதந்திரமாய்ச் சுற்றித் திரிய இடமளிக்கிறேன்.
மருதம்
வயல்கள் நிறைந்த நெல்லும், கரும்பும், வாழையும் விளையக் கூடிய என்னை மருதம் என்று அழைக்கிறார்கள். பச்சைப் பசேல் எனப் போர்வைப் போர்த்தி எனக்கு பயிர்கள் அழகூட்டுகின்றன. காய்கறிகள், பயிரினங்கள் வளர நான் என்னையே கையளிக்கிறேன்.
உழவர்கள் என்னை வெட்டுகிறார்கள்; தோண்டுகிறார்கள்; உடைக்கிறார்கள்; தூள் தூளாக்குகிறார்கள்; சேறாக்குகிறார்கள். நான் எதற்கும் கவலைப்படுவதில்லை. அவர்கள் என்னைத் துன்புறுத்தும் அளவுக்கு அதிகமாகவே நான் அவர்களுக்கு நன்மை செய்கிறேன்.
நெய்தல்
கடலைத் தாங்கி நிற்கும் என்னை நெய்தல் என அழைக்கிறார்கள். மீன் வளம் தந்து மக்களை மகிழ்விக்கின்றேன்.
எண்ணற்ற கனிம வளங்களை மறைத்து வைத்திருக்கிறேன். உலக உயிர்கள் வாழ உவப்புடன் என்னையே தருகின்றேன்.
நெகிழிகளால் என் வளத்தை பாழ்படுத்தி விடாதீர்கள். தரிசாகப் போட்டு என்னை வெறுமையாக்கி விடாதீர்கள். உங்கள் வாழ்க்கை நலமாக அமைய என்னையே தருகின்றேன். உவப்புடன் வாழுங்கள்.
பாலை
"நான் பாலை நிலம். வறட்சியின் அரசி, வெப்பத்தின் வாசல். என்னைச் சுற்றி எங்கும் மணல் தானே அரசாளும். பச்சை நிறம் என்னை விட்டு வெகு தொலைவில் உள்ளது. என்னை ஆளும் தெய்வம் கொற்றவை. வீரமும் வலிமையும் எனது குணங்கள். எயினர்கள் என்னை தங்கள் வாழ்விடமாகக் கொண்டுள்ளனர்.
என் இரவுகள் நீண்டதும், குளிர்ச்சியும் நிறைந்ததும். பகல்கள் வெயிலின் கொடுமையால் சுட்டெரிக்கும். என் மரங்கள் உலர்ந்தும், இலைகள் உதிர்ந்தும் காணப்படும். என் மலர்கள் மணமற்றும், வண்ணமற்றும்.
நான் சோகத்தின் சொர்க்கம் போலத் தோன்றினாலும், வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை கற்றுத்தரும் பள்ளிக்கூடம் போன்றேன். இங்கே வாழ்க்கை என்பது சவால்களை எதிர்கொள்வது, இயற்கையோடு ஒன்றி வாழ்வது.
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication

Comments
Post a Comment