தற்கால சிறுவர்களின் உணவு பழக்க வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உடல் ஆரோக்கியம் மற்றும் உணவு முறை பற்றி பார்ப்போம்

  உணவு முறையும் உடல் ஆரோக்கியமும்


ஒரு கற்பனையான உரையாடலைக் கொண்டு உணவு பழக்க வழக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பற்றி சமூக அக்கறையுடன் கூடிய பதிலை பார்ப்போம்


"தம்பி.. உனக்குப் பிடிச்ச காய் சொல்லு?"

"கேரட்"


"பிடிச்ச பழம்?"

"ஆப்பிள்"


பிடிச்ச காலை உணவு?

"நூடுல்ஸ்"


"மத்தியானத்துக்கு"

"ஃப்ரைடு ரைஸ்"


இரவுக்கு 

"பீட்ஸா அல்லது பாஸ்தா"

இது ஏதோ ஆங்கிலப்படத்தின் வசனம் அல்ல. "சரியா சாப்பிட மாட்டேங்கிறான் டாக்டர்" என்று என்னிடம் அழைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உரையாடல். ஒட்டுமொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவை விட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படி? இட்லியும் சாம்பார் சாதமும் கத்தரிக்காய்ப் பொரியலும் இனி காணாமல் போய்விடுமா? அதிர்ச்சியான பதில், 'ஆம், காணாமல் போய்விடும்!' உங்கள் குழந்தைகள், "ஆடு, மாடுகளைத் தவிர மனுஷங்க கூட கீரையைச் சாப்பிடுவாங்களா மம்மி?" என எதிர்காலத்தில் கேட்கக்கூடும்!


மருத்துவர் ஒருவரின் இக்கருத்திற்குச் சமூக அக்கறையுடனான நமது பதில் என்னவாக இருக்கும்?


நமது பதில்

உணவு பழக்கம்

இயற்கையோடு இயைந்த உணவுப் பழக்கத்தை நாம் கைவிட்டதாலேயே பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பாரதத்தை நோக்கிப் படையெடுக்கின்றன. கடலை உருண்டையும், கல்கோனாவையும், பதநீரையும், சோளப் பணியாரத்தையும், தினைப் பாயாசத்தையும், குதிரைவாலி கொழுக்கட்டையையும் நாம் கைவிட்டதனாலேயே இன்று பலவித கொள்ளை நோய்களுக்கு ஆட்பட்டுக் கிடக்கிறோம்.


இயந்திர வாழ்க்கை 

வளர்ச்சி, வேகம், கணினியுகம் என்று மாறி வரும் உலகில் இயற்கையை அழித்து முன்னேற முற்படுகிறோம். அமெரிக்க நிறுவனங்களுக்காக இங்கிருந்து கொண்டு நடு இரவில் வேலை பார்ப்பதால் பலர் மனநோயாளிகளாவே மாறி விடுகின்றனர். தூக்கமின்மையால் பல மோசமான பழக்க வழக்கங்களுக்கும் ஆட்படுகின்றனர்.


இந்நிலை மாற 

அளவோடு எல்லாச் சத்துகளும் கிடைக்கும்படியான உணவுகளை உண்டு சரியான நேரத்திற்கு உறங்கி, உடற்பயிற்சியும் செய்தால் வாழ்வு வளம் பெறும். விரைவு உணவகங்களில் விற்கப்படும் உணவுகளையும், பொட்டலப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்த்தால் நோயின்றி வாழலாம்.


அது போல கம்பு, கேழ்வரகு, திணை, குதிரைவாலி, போன்ற சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் பற்றி நாம் பொழுதுபோக்காக இணையதளத்தில் வீடியோவாக பார்க்கிறோம் அதை பார்ப்பது மட்டுமல்லாமல் அதை வீட்டில் தயாரித்து உணவாக உட்கொண்டு வந்தால் நமது வாழ்வு சிறப்பாக அமையும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லதாக இருக்கும்.


This Content Sponsored by Buymote Shopping app


BuyMote E-Shopping Application is One of the Online Shopping App


Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)


Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8


Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication

Comments

Popular posts from this blog

Different Types of Gold Purity Certifications and Hallmarking Standards Every Buyer Should Know Before Purchasing Gold Jewellery in India

இன்றைய சமூகத்தில் வரதட்சணைக்காக பெண்களுக்கு நடத்தப்படும் துன்புறுத்தல்கள் அதன் அடிப்படையிலான பெண்கள் கொடுமைகள் மற்றும் அதனால் நேரும் மரணங்கள் தொடர்பான சமீபத்திய சமூக நிகழ்வுகள்

Experience the Joy of Family Travel in the Entertaining Tourist Family Movie Adventure Story Unfolds