புயல் வெள்ளம் மற்றும் வறட்சியால் ஒரு சாதாரண மனிதன் எதிர்கொண்ட இயற்கை இடர் குறித்து என்னுடைய பார்வையில் ஒரு கட்டுரை

இயற்கை


வறட்சி


மழைக்காலம் வந்தது; ஆனால் மழை வரவில்லை, மழைக்காலத்திலேயே மழை வரவில்லையே என எல்லோரும் கவலைப்பட ஆரம்பித்தனர்.


விதைத்த விதை என்னவாவது? வயல்களில் நட்ட பயிர்கள் எப்படி விளையும்? ஏற்கனவே நீரின்றி பயிர்கள் வாடத் தொடங்கிவிட்டதே ! ஏரியிலும் நீரில்லை; கிணற்றிலும் நீரில்லை; வாய்க்காலும் வறண்டு விட்டது என பெருமூச்சு விட்டனர் மக்கள்.


இன்னும் ஒரு மாதத்திற்குள் மழை பொழியா விட்டால் குடிக்கக்கூடத் தண்ணீரின்றி


எல்லோரும் அவதிப்படுவர் என்று நினைக்கும் போதே பயம் வந்து விட்டது.


இன்று மழை பெய்யும், நாளை மழை பெய்யும் என்று நாட்கள் நகர்ந்தனவே தவிர மழை ஒன்றும் வரவில்லை.


மரங்கள் காய்ந்து விறகுகளாய் மாறின. வயல்வெளிகளில் பயிர்கள் எல்லாம் சருகாய்க் காய்ந்து நைந்து போயின. வெயிலின் தாக்கத்தால் எரிந்து விடுமோ என்ற நிலை.


எங்கும் வறட்சி; மனிதர்களுக்கே குடிக்க நீரில்லாத போது ஆடுமாடுகளுக்கு யார்


நீர் தருவது? கொடுமை! வெயிலின் கொடுமை! தாங்க முடியாமல் தவித்த நான் விடியலைத் தேடி ஏங்கிக் கொண்டிருந்தேன்.


வெள்ளம்


இந்த டிசம்பர் மாதம் எங்கள் ஊரில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. புயலும் சேர்ந்து கொண்டு பெருங்காற்றாய் வீசியது. மழையினால் வந்த வெள்ளமும், அது கொடுத்த பெருந்துயரும் மிக அதிகம்.


ஊரில் எங்கும் தண்ணீர், தண்ணீர், தண்ணீர். ஆனால் குடிக்க தண்ணீர் கிடைக்க வில்லை. மின்சாரமும் தடைசெய்யப்பட்டு அதனாலும் ஏகப்பட்ட துயரங்கள்.


எங்கள் வீடு அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் தளத்தில் இருந்தது. அதனால் பரவாயில்லை. கீழ்த்தளத்தில் இருந்தவர்களது மின்சாதனப் பொருட்கள் பல வெள்ள நீரில் பழுதுபட்டுப் போய்விட்டன.


மின்சாரம் இல்லாததால் தகவல் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மேலும்


இரண்டாவது நாள் முதல் உணவுக்கும் பஞ்சம் வந்து விட்டது. நாங்கள் மொட்டைமாடியில்


தஞ்சம் புகுந்தோம். எங்கள் குடியிருப்பில் இருந்தவர்கள் பலரது சிநேகம் அப்போது

எனக்குக் கிடைத்தது.


நல்ல வேளையாக, இரண்டாம் நாள் வெள்ளம் வடியத் தொடங்கியது. மூன்றாம் நாள் நிலைமை சீரடைந்தது.


கருத்து


காடுகளை அழிப்பது மற்றும் ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பது போன்ற தவறான செயல்களை செய்யாமல் இருப்பதன் மூலம் இயற்கை பேரிடர் ஏற்படாமல் தடுக்கலாம்


This Content Sponsored by Buymote Shopping app


BuyMote E-Shopping Application is One of the Online Shopping App


Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)


Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8


Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication

Comments

Popular posts from this blog

இன்று நாம் பரவலாகவும் நவீனமாகவும் பயன்படுத்தும் இணையத்தின் வளர்ச்சி 2000 ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்று பார்ப்போம்

நம் பாரம்பரியத்தின் மறையாத நினைவு, கடந்த காலத்தின் சாட்சி, காலத்தால் மறக்க முடியாத கதை - சுமைதாங்கி கல்

Understanding Air Circuit Breakers: Functionality, Benefits, and Applications in Industrial and Commercial Electrical Power Distribution Systems