பிறந்தநாள்
சிறந்த பிறந்தநாள் பரிசு மற்றும் பிறந்தநாளை அர்த்தமுள்ளதாக மாற்றுவது பற்றியும் ஆதரவற்ற முதியோர்களின் தேவை பற்றியும் ஒரு சிறிய கட்டுரை
சிறுகதை
மிக மகிழ்வுடன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான் முகிலன். “ரொம்ப நன்றி. ஓ.. அப்படியா! சரிங்க ஐயா. நாம நாளை சந்திப்போம்" என்று கூறிக் கொண்டே கைபேசியை மேசையில் வைத்தான். “கமலா... கமலா...” என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்தான். “என்னங்க...” என்று கேட்டவாறு உள்ளிருந்து வந்தாள் கமலா.
"போன வாரம் என் பிறந்த நாளைக்கு முதியோர் இல்லம் போனோமே... அங்கே இருந்த ஒருத்தரைப் பார்த்து நீ கூட உன் அப்பா மாதிரி இருக்காருன்னு சொன்னியே"
"ஆமாம்... இப்ப அதுக்கென்ன...?"
"நான் அவருக்கு ஏதாவது உதவி வேணுமான்னு அந்த இல்ல நிர்வாகிகிட்ட கேட்டிருந்தேன். அதுக்கு அவங்க பையன் அரசு இலவச வீடு திட்டத்தில் வீடு கிடைக்க• முயற்சி பண்றாராம். அதுக்கு 3000 ரூபாய் இருந்தால் அந்த வீடு கிடைத்துவிடும் என்றார். நான் அதைத் தர்றேன்னு சொல்லிட்டேன். இப்ப அவர் தான் போன் பண்ணினார். அந்த வீடு தயார் ஆயிடுச்சாம். இன்னும் ஆறு மாசத்தில அந்த பெரியவர அவர் பையன் கூட்டிட்டு போயிருவானாம்".
"அப்படியா ரொம்ப சந்தோசம்" என்றாள் கமலா, உண்மையிலேயே முகத்தில் மகிழ்ச்சி பொங்க.
"ஆமாம்... அதான், நான் நாளைக்குப் போயி அந்த பெரியவரைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கலாம்னு நினைச்சிருக்கேன். நீயும் வா" என்றான் முகிலன். அவன் தனது ஒரு பிறந்த நாளை மிகவும் அர்த்தமுள்ளதாக ஆக்கியதாக எண்ணி மனம் மகிழ்ந்தான்.
என் அண்ணன்
என்னுடைய அண்ணன் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அருகில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று ஒரு நேரம் அனைவருக்கும் உணவு அளிப்பார் அதேபோல ஒவ்வொரு முறை பணி உயர்வு கிடைத்த போதும் முதியோர்களுக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உதவி செய்கிறார்..
தற்போதைய மாணவர்கள்
நான் அனைத்து மாணவர்களை குறிப்பிடவில்லை ஒரு சில மாணவர்கள் பணத்தின் அருமை தெரியாது இருக்கின்றன ஒரு நண்பனின் பிறந்த நாளுக்காக ரோட்டில் கேக் வெட்டுவது பயனற்ற பொருளை வாங்கி பணத்தை வீணடிப்பது இதுபோல பல விஷயங்களை செய்கின்றனர்.. இவ்வாறாக இல்லாமல் பொது மக்களுக்கு இடையூறு அளிக்காமலும் பெரியவர்களுக்கு உணவு வழங்குவதும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பதும் நல்ல ஒரு செயலாகும்...
"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"
.jpeg)
Super
ReplyDelete💚💙
DeleteNice
ReplyDelete❤️
Delete