பிறந்தநாள்
சிறந்த பிறந்தநாள் பரிசு மற்றும் பிறந்தநாளை அர்த்தமுள்ளதாக மாற்றுவது பற்றியும் ஆதரவற்ற முதியோர்களின் தேவை பற்றியும் ஒரு சிறிய கட்டுரை சிறுகதை மிக மகிழ்வுடன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான் முகிலன். “ரொம்ப நன்றி. ஓ.. அப்படியா! சரிங்க ஐயா. நாம நாளை சந்திப்போம்" என்று கூறிக் கொண்டே கைபேசியை மேசையில் வைத்தான். “கமலா... கமலா...” என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்தான். “என்னங்க...” என்று கேட்டவாறு உள்ளிருந்து வந்தாள் கமலா. "போன வாரம் என் பிறந்த நாளைக்கு முதியோர் இல்லம் போனோமே... அங்கே இருந்த ஒருத்தரைப் பார்த்து நீ கூட உன் அப்பா மாதிரி இருக்காருன்னு சொன்னியே" "ஆமாம்... இப்ப அதுக்கென்ன...?" "நான் அவருக்கு ஏதாவது உதவி வேணுமான்னு அந்த இல்ல நிர்வாகிகிட்ட கேட்டிருந்தேன். அதுக்கு அவங்க பையன் அரசு இலவச வீடு திட்டத்தில் வீடு கிடைக்க• முயற்சி பண்றாராம். அதுக்கு 3000 ரூபாய் இருந்தால் அந்த வீடு கிடைத்துவிடும் என்றார். நான் அதைத் தர்றேன்னு சொல்லிட்டேன். இப்ப அவர் தான் போன் பண்ணினார். அந்த வீடு தயார் ஆயிடுச்சாம். இன்னும் ஆறு மாசத்தில அந்த பெரியவர அவர் பையன் கூட்டிட்டு போயிரு...