சுய புத்தி
சுரேஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றினார். உறவினர் இறந்த காரணத்தினால் சூப்பர்வைசர் அனுமதி பெற்று இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்தார். அவர் செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருப்பவர். இது பிடிக்காத சக ஊழியர் மேனேஜரிடம் இவர் இவ்வாறாக பொய் கூறி மது அருந்திவிட்டு வீட்டில் ஓய்வெடுப்பதற்காகவே அடிக்கடி விடுப்பு எடுக்கிறார் என்று தெரிவித்தார். அந்த மேனேஜர் வேலைக்கு புதிதாக சேர்ந்தவர் என்பதால் சுரேஷ் ஐ பற்றி விசாரிக்காமல் நேரில் அழைத்து பேசினார். அப்போது சுரேஷ் நடந்த விஷயத்தை விளக்கினார். ஆனால், அதை மேனேஜர் நம்பாமல் நீங்கள் செய்தது தவறு இவ்வாறு இனிமேல் செய்ய மாட்டேன் என்று எனக்கு மன்னிப்பு கடிதம் எழுதித்தாருங்கள் என்று கூறினார். அதற்கு சுரேஷ் நான் முன்னதாகவே அனுமதி பெற்று தான் விடுப்பு எடுத்தேன் அப்படி இருக்கும் பொழுது நான் எதற்காக மன்னிப்பு கடிதம் எழுதி தர வேண்டும், அதுமட்டுமல்லாது விடுப்பு எடுத்து மது அருந்தும் அளவிற்கு நான் செல்வந்தனும் அல்ல அதற்கு ஏற்ற வருமானமும் எனக்கு இல்லை என்று தெரிவித்தார். இவர் இவராக பேசியது அந்த மேனேஜருக்கு பிடிக்காத காரணத்தினால் நீங்கள் மன்னிப்பு கடிதம் எழுதித்தாருங்கள் இல்லையேல் உங்களுக்கு இங்கு வேலை இல்லை என்று கூறினார். சற்றும் யோசிக்காமல் சுரேஷ் நான் வேலையை விட்டு நின்று கொள்கிறேன் என்று கூறி அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
மற்றவர் சொல்லை கேட்டு சுயமாக சிந்திக்காமல் அந்த மேனேஜர் செய்த செயலால் ஒரு நல்ல நேர்மையான மனிதரை அந்த நிறுவனம் இழந்துவிட்டது.
எல்லா மனிதனுக்கும் சொல் புத்தி இருக்கும் அதே போல் சுய புத்தியும் கண்டிப்பாக இருக்க வேண்டும்....
- அர்ஜூன்
Super it's really amazing
ReplyDelete🥰
Delete