நாம் கடைகளுக்கு சென்று தான் பொருட்களை வாங்கி வருவோம். ஆனால் இ காமர்ஸ் தளங்கள் நாம் பொருட்களை வாங்கும் முறையை மாற்றி அமைத்து எப்படி என்று பார்ப்போம்
அனைத்து விதமான பொருட்களும் அனைத்து மக்களுக்கும் மீஷோ பண்டிகை காலம் என்றாலும் சரி வீட்டிற்கு ஒரு பொருள் தேவை என்றாலும் சரி பெரும்பாலும் நாம் கடைகளுக்கு சென்று தான் பொருட்களை வாங்கி வருவோம். ஆனால் இ காமர்ஸ் தளங்கள் நாம் பொருட்களை வாங்கும் முறையை மாற்றி அமைத்து எப்படி என்று பார்ப்போம் வீட்டில் உள்ள அனைவருக்கும் துணிமணி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ,செல்போன் உள்ளிட்ட அனைத்தையும் வாங்கிக் கொள்ள முடிகிறது . அந்த அளவிற்கு இந்தியாவில் மக்கள் ஷாப்பிங் செய்யும் நடைமுறையை இந்த இ காமர்ஸ் தலங்கள் பெரிய அளவில் மாற்றி வைத்திருக்கின்றன . அமேசானும், பிளிப்கார்டும் இ காமர்ஸ் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. கோடிக்கணக்கில் முதலீடு செய்து கிடங்குகள் , லாஜிஸ்டிக் கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றை உருவாக்கின . சாதனை ஆனால் இவை எதுவுமே இல்லாமல் சத்தமே இல்லாமல் இ காமர்ஸ் தளத்தில் நுழைந்து அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்டவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளி மிகப் பெரிய சாதனையாளராக உருவாகி இருக்கிறது மீஷோ. அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் பெருநகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்களை குறி வைத்த நிலையில் மீஷோ குறைந்...